எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிக்கு முன்பு சுயாதீன ஆணைக்குழு அமைத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபையின் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

