Breaking
Sat. Dec 6th, 2025

தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ள முறைப் பாட்டை துரிதமாக விசாரணை செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கோரியுள்ளார்.

அமைச்சருக்கு எதிராக தே. சு. மு. நேற்று முறைப்பாடு செய்திருந்தது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை துரிதமாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.

தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தொடர இருப்பதாகக் கூறிய அவர் தே. சு. மு. முன்வைத்துள்ள குற்றச்சாட் டுகள் பொய்யானவை என கூறினார்.

Related Post