Breaking
Sun. Dec 7th, 2025
ஊவா மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் ஐக்கிய தேசியகட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின்பெர்ணாண்டோ வெளிப்படுத்திய தலைமைத்துவ பண்புகள் மற்றும் கட்சிக்கு கிடைத்துள்ள சாதகமான முடிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து அவரை கட்சியின் பிரதித்தலைவராக்க வேண்டும் என கட்சியின் தலைவர்கள் சிலர் கருதுவதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஹரின்பெர்ணாண்டோவின் பெயரை பிரதிதலைவர் பதவிக்கு சிலர் முன்மொழியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில்விக்கிரமசிங்க சஜித்பிரேமதாஸாவின் பெயரை கட்சியின் பிரதிதலைவர் பதவிக்கு முன்மொழிவார் என ஊவா மாகாண சபைதேர்தலுக்கு முன்னர்  தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post