ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மருதமுனை தேர்தல் பிரசாரக்கூட்டம்!

-ஊடகப்பிரிவு-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில், கல்முனை மாநகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை (19) மருதமுனையில் இடம்பெற்றக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன்போது  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.