ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க தேசிய ஒற்றுமைக்கான செயற்குழு

எந்த ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க வேண்டும்  என்பதனை உறுதிபடுத்தும் நோக்கில் தேசிய  ஒற்றுமைக்கான   செயற்குழு ஒன்றை  அமைக்க   அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால்  முன்வைக்கப்பட்ட இது  தொடர்பான  பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது தொடர்பில்  அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பது  குறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ஆகிய துறைகளின் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அதே போன்று எந்த ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக தேசிய ஒற்றுமை தொடர்பான செயற் குழுவொன்றை அமைப்பதற்காக   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம வழங்கப்பட்டுள்ளது.