Breaking
Mon. Dec 15th, 2025

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி கிரஷ் சோடா சகா, கிளாஷ் ராயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

இந்தியா, சீனா நாடுகளில் போக்கிமோன் கோ பயன்பாட்டுக்கு வந்தால் இன்னும் அதிக லாபத்தை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By

Related Post