Breaking
Fri. Dec 5th, 2025

மழை இறைவனின் மிக பெரிய அருள்களில் ஒன்றாகும். இந்த மழையின் மூலமே பூமி உயிரோட்டம் நிறைந்ததாக நீடிக்கிறது. இந்த மழையின் மூலமே பூமி பசுமை நிறைந்ததாக மாறுகிறது .

இந்த மழையின் மூலமே பூமியின் நிலத்தடி நீர் வளம் வழர்கிறது. இறைவன் எங்கு எப்போது மழையை இறக்க வேண்டும் என்று விரும்புகின்றானோ அங்கே அவன் விரும்பும் நேரத்தில் மழையை இறக்குகிறான் . கடந்து சென்ற மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை மக்கா மாநகரை அலங்கரித்தது.

இடியுடன் கூடிய மழைக்கிடையேயும் இறைஇல்லத்தை வலம் வரும் தவாப் என்ற அமலை மக்கள் தங்கு தடையின்றி செய்தனர். மழையில் நனைந்த நிலையில் உள்ள புனித ஆலயத்தின் தோற்றத்தையும் இடிமழைக்கிடையே தயங்காமல் மக்கள் தவாப் செய்வதையும் தான் படம் விளக்ககிறது.

Related Post