Breaking
Fri. Dec 5th, 2025
வழமை போன்று இம்முறையும் கட்டாரில் வசிக்கும் இலங்கையருக்கான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையும், தமிழ் மொழியிலான கொத்பாப் பிரசங்கமும் கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்டாரில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புக்களின் தாய் அமைப்பாக செயற்பட்டு வரும் ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் கதார் அமைப்பு (SLMQ) செய்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு பெருநாள் தொழுகை தொழுவிக்கப்பட இருப்பதால் கட்டார் வாழ் இலங்கை சகோதர, சகோதரிகள் வீட்டில் இருந்தே உளுச் செய்து  உரிய நேரத்துக்கு முன்னர் சமூகம் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றார்கள்.
ஈத் முபாரக் – குல்லு ஆமின் வா அன்தும் பிஹைரின்
தகவல் – ஹாஷிம் ஹம்சா

Related Post