Breaking
Sat. Dec 6th, 2025

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள ‘மகுள் மதுவ’யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (படத்தில் உள்ள : சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய ) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியது.

இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் அசாதாரண சூழ்நிலை தோன்றியதுடன்,

இது குறித்து கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலதா மாளிகையின் நிர்வாக செயலாளர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் இவ்வாறு தேசிய கொடி அகற்றி வேறு கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Post