Breaking
Sat. Dec 6th, 2025

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதஸ்தளங்கள்,மைதானம் புனரமைப்புக்கு கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிதி உதவியினை இன்று வியாழக் கிழமை (11) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா வழங்கி வைத்தார்.

பிரதி அமைச்சரின் கம்பரெலிய திட்டத்தின் கீழ் குறித்த நிதி உதவிகள் வழங்கப்பட்டன கிண்ணியா வில்வெளி பள்ளிவாயல், சூரங்கல் ஜூம்ஆ பள்ளிவாயல்,கற்குழி பள்ளிவாயல் ஆகியவற்றுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாவும் கற்குழி பொது விளையாட்டு மைதான புனரமைப்புக்கு 20 இலட்சமும் ஒதுக்கப்பட்டு இதற்கான நிதியினை உரியவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Related Post