கரடிக்குளி வட்டார தேர்தல் காரியாலய திறப்புவிழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு-

வன்னி மாவட்டத்தில் முசலி பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் கரடிக்குளி, கொண்டச்சி வட்டார வேட்பாளர் சுபியான் ஆசிரியரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா நாளை (17/ 01/ 2018) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட அதிதியாக  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் மற்றும் முசலி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும்,  கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.