கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா பிரதம அதிதியாக நவவி எம்.பி

தில்லையடி ரத்மல்யாய பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்க்கான அடிக்கல்நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 15 இலட்சம் ரூபாய் செலவில் இம்மைதானம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.