அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வவுனியா மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும், கிராமங்களுக்கும் விஐயம் செய்து மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் பலபிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துவைத்ததுடன்,
கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற சிங்கள கிராமமான கலேபோகஸ்வெவ கிராம மக்கள் பல பிரச்சினைகளை முன்வைத்ததுடன் தாம் அனைவரும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவதாக கூறி இணைந்துகொண்டனர்.


