Breaking
Sat. Dec 6th, 2025

அஸ்ரப் ஏ சமத்

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் சமுா்த்தி அமைச்சின் ஒத்துழைப்போடு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் எல்லா தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கியதாக 50000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுவாஞசிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 179 பயனாளிகளுக்கு 100000 ரூபா வீட்டுக்கடன் வழங்கும் வைபவம் 02.04.2015 அன்று களுவாஞசிக்குடி இராசமாணிக்கம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபை தலைவர் திரு.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்திற்கு சமுா்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் , சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் திரு. குநநாதன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்

Related Post