Breaking
Sun. Dec 7th, 2025

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொழில்சார் ஊக்குவிப்பு பொருட்கள் செயலகத்தில் (28) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊக்குவிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.

பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், பிரத்தியேக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓடாவி வேலை செய்பவர்களுக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இரண்டு இலட்சம் பெறுமதியான ஓடாவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

-முர்ஷிட் கல்குடா-

 

 

 

 

Related Post