காணாமல் போன சிறுவன் பிச்சைகாரரிடமிருந்து மீட்பு

அம்பலாங்கொடை பஸ் தரிப்பிடத்தில்  காணாமல் போன மூன்று வயதான சிறுவனை தம்புள்ளையிலுள்ள ஒரு பிச்சைக்காரரிடமிருந்து நேற்று புதன்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுவனின் தாய், வேலைவாய்ப்பு தேடி வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் இதனால் தனது தாயிடம் சிறுவனை  விட்டு சென்றுள்ளார்.சிறுவன்
அக்குரஸையை வசிப்பிடமாக கொண்ட பாட்டியிடம்  வசித்து வந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம்  தனது பேரனுடன் பாட்டி அம்பலங் கொடையிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு சென்றபோது  பிச்சைக்காரர் ஒருவர், பாட்டியை  ஏமாற்றி சிறுவனை கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் படங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப் பட்டன. இதன் தொடர்ச்சியாக பொலிசார் நடத்திய ஒரு மாத தேடுதலின் பின் சிறுவன் நேற்று பிச்சைகாரனாக  மீட்கப்பட்டுள்ளான்.(tk)