காத்தான்குடி சுதந்திரக் கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர்  ரிஷாட்டுடன் இணைவு!

-ஊடகப்பிரிவு-

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்த பலர் இன்று காலை (20) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் முன்னிலையில் இணைந்து கொண்ட இவர்கள்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காத்தான்குடி நகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.