கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், நடைபவணி நிகழ்வில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலையின் 91 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும், தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமையையும் முன்னிட்டு மாபெரும் நடை பவணியானது பாடசாலை பிரதான நுழைவாயிலில் இருந்து ஆரம்பமானது.

கிண்ணியா பிரதான வீதியூடாக ரகுமானியா நகர், துறையடி, மாஞ்சோலை சேனை வீதியூடாக மீண்டும் பாடசாலையை குறித்த பேரணி வந்தடைந்தது.

பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் சமூகக் கல்விக்கான வலையமைப்பு  தலைமையில் நடை பெற்ற குறித்த பேரணியானது  “ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த கல்விச் சமூகமொன்றை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்” எனும் தொனிப் பொருளில் இடம் பெற்றது.

பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,அதிபர் , அரசியல் பிரமுகர்கள் என  பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ் நடை பவணிக்கு பிரதம விருந்தினராக  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் மற்றும் முன்னால் கிழக்கு  மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, முன்னால் நகர சபை பிரதி தவிசாளர் சட்டத்தரணி அமீன் முஜீப்  உட்பட கல்வியலாளர்கள், உயரதிகாரிகள் என மேலும் கலந்து கொண்டார்கள்.