Breaking
Sat. Dec 6th, 2025
திருகோணமலை மாவட்டம் தி/கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பாடசாலை உதைப் பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று ( 21) காலை பாடசாலை வளாகத்தில் வைத்து பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.சலீம் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
18,20 வயதின் கீழ் உள்ள  உதைப்பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகளும் பிரதியமைச்சரால் வழங்கப்பட்டன.
இதன் போது மாணவர்களுக்கான காலை ஆராதனையின் ஒரு பகுதியாக ஒழுக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாணவர்களிடம் பிரதியமைச்சர் பகிர்ந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
இதில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி மற்றும் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post