கிண்ணியா மகமாறு வீட்டு திட்டம் ஆரம்பம்! 

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்றூபினால் கிண்ணியா, மகமாறு கிராமத்தில் மானிய அடிப்படையில் மாதிரி கிராமத்துக்கான வேலைகள் இன்று (28)  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீடற்றவர்களுக்கான வீட்டினை பெற்றுக் கொடுக்கும் இந்தத் திட்டதில், முதற்கட்டமாக 30 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ் றூப் மற்றும் திருகோணமலை மாவட்ட வீடமைப்பு முகாமையாளர் திருக்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரியாத், நகர சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(ன)