Breaking
Fri. Dec 5th, 2025

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர்
இதில் அமைச்சர்களான ராஜித, வஜிர அபேவர்த்தன, ஹரிசன் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு எம் பி க்களான சுமந்திரன், சிறீதரன் உட்பட உயரதிகாரிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..

-ஊடகப்பிரிவு-

Related Post