Breaking
Fri. Dec 5th, 2025

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வாடாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

அத்துடன் இத்தீர்மானத்திற்கமைய மாகாணத்தில் மீதமாகவுள்ள இரண்டு அமைச்சர் பதவிகளையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று  பொறுப்பேற்கவுள்ளதாவும் மேலும் தெரிய வருகிறது.

நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சரான ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு வழங்கிய ஆதரவினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றனர்.

அதேவேளை நேற்று மாலை இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுதபானி தலைமையில் இடம்பெற்ற பொது,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலமைச்சரான ஹாபீஸ் நசீர் அஹமதிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

அத்துடன் இன்று  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களளான சீ. தண்டாயுதபாணி மற்றும் துரைராஜசிங்கம் ஆகியோர்  கிழக்கு மாகாண அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவும் உள்ளனர்.

Related Post