Breaking
Fri. Dec 5th, 2025

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமுர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் வைபவம் குச்சவெளி  பிரதேச செயலாளர் பிரிவிலும் வழங்கி வைக்கப்பட்டன.

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப் படிவங்களை இன்று (02) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

குச்சவெளி பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் தேசிய திட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் இது வரைக்கும் 5935 புதிய சமுர்த்தி பயனாளிகள் தகுதி பெற்று ஆரம்ப வைபவத்தில் பத்திரங்களை பெற்றுள்ளனர்.

இக் குறித்த ஆரம்ப வைபவத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சன்தித் சமரசிங்க, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Related Post