Breaking
Fri. Dec 5th, 2025
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜெயசேகர ஆகியோர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்பப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
உலகில் ஏற்பட்டுள்ள இக்கொடிய நோய் நீங்கி, சகலரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன் எனவும், நமது இறுதி வெற்றி, பிரார்த்தனையில் உள்ளதென்ற நம்பிக்கையினாலேயே சகலதையும் வெல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post