கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் இன்று ராட்சத எரிகல் விழுந்ததைப் போல் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்றிரவு மக்கள் கண்ட வெளிச்சம் எரிந்து விழுந்த ராக்கெட்களின் பாகங்களாக இருக்கக்கூடும் எனவும் ஒரு கருத்து நிலவி வருகின்றது.

