Breaking
Sat. Dec 6th, 2025

சம்மாந்துறை பிரதேசத்தின் அபிவிருத்திக் குழு கூட்டம்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் தலைமையில் நேற்று (02) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  இந்தக் கூட்டத்தில் சம்மாந்துறை மண்ணின் தேவைகள் கருதி இஸ்மாயில் எம்.பி அவர்களினால் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கதிற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் விபரங்களையும், அதன் உரிமை தொடர்பான ஆவணங்களையும் கண்டறிதல்.

கைத்தொழில் பேட்டைக்கான இட ஒதுக்கீடு சம்மந்தமாக இதுவரைக்கும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறியப்படுத்தவும்.

பொதுமக்களுக்காக வாரத்தில் ஒரு நாளை மண் அகழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுதல்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச காணிகளின் விபரத்தை பெற்றுத்தருமாறு பிரதேச செயலாளரிடம் வேண்டுதல்.

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட தேசிய  பாடசாலைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கும், தற்போதைய பாடசாலைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்குமான உபாயங்களை கண்டறிதல்.

சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆசிரியர்கள்  மற்றும் கல்விசாரா ஊழியர்கள் தொடர்பான இடமாற்றக் கொள்கை ஏதாவது உண்டா ? அவ்வாறாயின் தெளிவுபடுத்தவும், இல்லை எனின் அதற்கான கொள்கை திட்டத்தை உரிய தரப்பினரிடம்  பேசி தயாரித்து சமர்ப்பிக்கவும்.

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை இனம்கண்டு அவற்றை தெரியப்படுத்தல் வேண்டும்.

இலங்கை மின்சார சபையின் சம்மந்துறை மின் பாவனையாளர் நிலையத்திற்கான நில ஒதுக்கீடும் அதன் அவசியத்தன்மை பற்றிய  விளக்கத்தையும் தெளிவுபடுத்த வேண்டும்.

20 வீட்டுத்திட்ட பகுதிகளில் உள்ளூர் சுற்றுலா மையமொன்றை அமைத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

 

 

Related Post