Breaking
Tue. Dec 9th, 2025

தோப்பூர் சந்தைக்கு அருகில் வைத்து காணாமல் போன கைப் பையிலிருந்த பெறுமதியான பொருட்களை கண்டெடுத்து உரியவரிடம் மாட்டு வண்டில் தொழிலாளி ஒருவர் ஒப்படைத்தச் சம்பவ ஒன்று இன்று செவ்வாய் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

-தோப்பூர் நிருபர் நஹீம் முஹம்மட் புஹாரி-

தோப்பூர் பொதுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக செல்வநகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்ற போது அவரின் கை பையிலுந்த 7500 ரூபா பணம்,கையடக்க தொலைபேசி1,வங்கியில் அடகு வைத்த இரண்டு அடகு துண்டுகள் போன்றன காணாமல் போயுள்ளது.

இதனை குறித்த பெண் பல இடங்களிலும் தேடியும் கண்டெடுக்காத காரணத்தால் வீடு திரும்பியுள்ளார்.

இந்த நேரத்தில் கைப் பை காணாமல் போன வீதி ஊடாக மாட்டு வண்டிலில் விறகு ஏற்றி வந்த் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பரீத் என்ற மாட்டு வியாபாரி சென்ற போது குறித்த கைப் பையை கண்டு செல்வநகர் பெரிய பள்ளி நிறுவாகத்திடம் தெரியபடுத்தியதை அடுத்து குறித்த பெண்ணிடம் அந்த கைப் பை ஒப்படைக்கப்பட்டதாக செல்வநகர் பெரிய பள்ளி நிறுவாகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த மாட்டு வண்டி வியாபாரி சண்மானம் வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை பெறாமல் சென்றமையினால் பள்ளிவாயல் நிறுவாகமும் குறித்த பெண்ணின் குடும்பத்தினரும் மாட்டு வண்டில் தொழிலாளி நன்றிகளை தெரிவித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது;.

Related Post