Breaking
Sun. Dec 7th, 2025

புத்தளம்,  கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தகர்கள் ஆகியோர், மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், விருதோடை அமைப்பாளருமான ஆஷிக் அவர்களை  அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் பிரதேசவாசிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை காணப்படுகின்றது எனவும், எனவே இந்தப் பிரச்சினையை தீர்க்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட  பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியில் வீதிவிளக்குகளைப் பெற்றுக்கொடுத்ததுடன், அதனை உரிய முறையில் பொருத்தி அதனை மக்கள் பாவனைக்காக வழங்கி வைத்தார்.

(ப)

Related Post