கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.

கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் வித்தியாளயத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் 2017/10/24 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய அவர்களும் இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம். பெளசி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.