பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 4 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு காலி நீதிமன்றம் தடை விதித்து கடவுச் சீட்டையும் முடக்கியது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே, நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. காலித் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு காலி நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவன்ற் கார்டே தனியார்
கோத்தாவுக்கு
நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும் வரை, கோத்தாபய ராஜபக் உட்பட நான்கு பேரையும் வெளிநாடு செல்லத் தடை விதிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிவானிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக திசநாயக்க, முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, அவன்ற் கார்டே பாதுகாப்புச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்சுள யாப்பா ஆகியோர் வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்தது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துள், காலி கடலில் நின்று கொண்டிருந்த கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் ஆயுதங்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன. இயந்திரத் துப்பாக்கிகள் உட்பட நவீன ஆயுதங்கள் மற்றும் அதற்கான ரவைகள் என்பன ஆயிரக் கணக்கில் மீட்கப்பட்டன.
மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அந்தக் கப்பல், அவன்ற் கார்டே தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் கடந்த காலங்களில் பாதுகாப்பு
அமைச்சின் கீழ் இயங்கிவந்தது.

