க.பொ.உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஆறாம் திகதி என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரத்தில் கணிதப் பாடத்தில் சித்திபெறாது உயர்தரம் தோற்றியுள்ள மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
க.பொ.த உயர் தரத்தில தோற்றுவதற்கு கணித பாட சித்தி கட்டாயமில்லை என்றாலும் தொழில் வாய்ப்பு- தொழிற்பயிற்சிகள்- கற்கை நெறிகள்- நிறுவனம் அல்லது வேறு தேவைகளுக்கு கணித பாடம் அவசியம் என்று கோரப்படும் பட்சத்தில் கணிதம் பாடச் சித்தி அவசியம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

