Breaking
Sat. Dec 6th, 2025

முஸ்லிம் கல்வி முன்னேற்றக் கழகம் 10ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்திருந்த 2016 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் 9 ஏ (A) சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) கொழும்பு, நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவரும், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளருமான அகமத் முனவ்வர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை  வழங்கி வைத்தார்.

இதன்போது, சுமார் 350 மாணவ மாணவிகள் தலா 12ஆயிரம் ரூபா பெறுமதியான பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ், பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் இஷாக், தொழிலதிபர் முஸ்லிம் சலாஹுத்தீன், அக்ரம் நூர் அமித், தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மத், கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, என்.எம்.அமீன், கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார், கைரியா கல்லூரி அதிபர் உட்பட மாணவ மாணவிகள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

Related Post