Breaking
Sun. Dec 7th, 2025

சட்டவிரோதமாக நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் விநியோகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

முறைகேடாகப் பயணம் செய்த மணல் டிப்பரை கைது செய்த தவிசாளர், சட்ட நடவடிக்கைக்காக இலுப்பைக்கடவை பொலிஸில் ஒப்படைத்தார். எமது பிரதேச வளங்களை எவரும் அழிக்க அனுமதிக்க முடியாது என தவிசாளர் மேலும் தெரிவித்தார். இந்நடவடிக்கையில் இலுப்பைக்கடவை வட்டார உறுப்பினர் மு.விஜயபாண்டி அவர்களும் இணைந்துகொண்டார்.

(ன)

Related Post