Breaking
Sat. Dec 6th, 2025

ஜனாதிபதி தேர்தலன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக கூறப்படும் சதி தொடர்பில் இதுவரை 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு வாக்கமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டதாக அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தினத்தின் இரவு மேற்கொள்ளப்படவிருந்த சதி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Post