சம்மாந்துறையில் வளத்தாப்பிட்டி,மஜீட்புரம் வீதிகள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம், மிஹ்ராஜ் வீதி கொங்கிரீட் இடப்பட்டு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.நௌசாட்டின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை, மல்வத்தை 03,மஜீட்புரம் பூனப்பால்லர் வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.