Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

சம்மாந்துறை, சென்னெல் கிராமத்தில் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சீரற்று பற்றை, புதர்களுடன் காடுகளாக காணப்படுகின்றன. இதனால், அருகில் வசிக்கின்ற பொதுமக்கள்  அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வீதிகளின் புனரமைப்பு தொடர்பில், மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷாட் அவர்களுக்கு, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலின் எழுத்து மூலமான கோரிக்கைக்கிணங்க, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related Post