சர்வதேசத் தரத்திற்கு அமைவான, நியாயமான உள்ளக பொறிமுறையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
காணி, தடுத்துவைத்தல், காணாமற்போதல் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் இராணுவ பிரசன்னம் தொடர்பில் குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் தலைவர்களை தாம் வலியுறுத்துவதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.
இலங்கை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சமாதானத்திற்கான நிதி மற்றும் ஏனைய வசதிகள் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் போதியளவு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

