Breaking
Fri. Dec 5th, 2025

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்

சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில் அமைய உள்ள இக்கட்டிடத்தில் மேல்புறத்தில் உலகின் மிகப்பெரிய மண்டபங்கள் அமைய உள்ளது.

லண்டனை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர்கள் இதற்கான பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இங்கு அமைய உள்ள 12 கோபுரங்களில் 10 கோபுரங்கள் 4 ஸ்டார் வசதிகளுடனும் 2 கோபுரங்கள் 5 ஸ்டார் அந்தஸ்தில் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. 2017ல் இத்திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Post