சவூதி மன்னர் சல்மான் சூழுரை!

சவுதியில் ரமாளான் மாதம் ஆரம்பமாகி விட்டது இதனை தொடர்ந்து சவுதி மன்னர் சல்மான் தன்னை சந்தித்தவர்களிடையே உரையாற்றும் போது ரமாளானின் மாண்புகளை பற்றியும் அதில் நாம் பேண வேண்டிய நடைமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார்

அவரின் உரையை அப்படியே தமிழில் தருகிறேன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்

ரமளான் மாதம் குர்ஆன் இறக்க பட்ட மாதம் அந்த மாதத்தை அடையகுடியவர்கள் அந்த மாதத்தில் நோன்பு வைக்கவேண்டும் என்று திருமறையில் பிரகடனம் செய்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இறைவனிடம் நண்மையை எதிர்பார்த்து யார் ரமளான் மாதத்தில் நோன்பு வைக்கின்றார்களோ அவர்களது முன் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்க படும் என் முழுங்கிய நபிகள் நாயத்தின் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் குடும்பத்தார் மீதும் என்றென்றும் இறையருள் பொழியட்டுமாக

எனது சவுதி நாட்டு மக்களே உலகின் பலநாடுகிலும் வாழும் எனது அருமை முஸ்லிம் சகோதரர்களே

அஸ்லாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி

அருள் நிறைந்த மாதமாகவும் நண்மைகளை வாரி வழங்கும் மாதமாகவும் அமைந்துள்ள ரமளான் மாதம் இதோ நம்மை வந்தடைந்து விட்டது

இந்த மாதத்தில் மன்னிப்பையும் அருளையும் நரக விடுதலையையும் மக்களுக்கு பரிசாக தருவதர்கு இறைவன் தயாராக உள்ளான்

இந்த மாதம் நம்மிடையே அன்பையும் நேசத்தையும் வழர்க்கும் மாதமாகும் நபிகள் நாயகத்தை பின்பற்றி இந்த மாதத்தை நாம் முகமலர்ச்சியோடும் அக மகிழ்வோடும் வரவேர்ப்போம்

நம்மில் சிலரிடம் காணபடும் இனவெறியையும் குழு வெறிகளையும் மறந்து வி்ட்டு நாம் அனைவரும் முஸ்லிம்கள் என்ற உணர்வோடு ஒன்று பட்டு நிர்ப்போம் அதன் மூலம் வென்று காட்டுவோம்

சவுதி அரசு எப்போதும் பாதிக்க பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிர்க்கும் அரசாகும் உலகில் எந்த மூலையில் முஸ்லிம்கள் பாதிக்க பட்டாலும் அவர்களுக்கு தோழ் கொடுக்கும் அரசாகும்

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் ரமாளான் மாதத்தை உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் உரிய முறையில் பயன் படுத்தி இறைவனிடம் தனது மதிப்பை உயர்த்தி கொள்ள முயர்ச்சிக்க வேண்டும்என்ற வேண்டுகோளோடு எனது உரையை நிறைவு செய்கிறேன்
இவ்வாறு அவரி்ன் உரை அமைந்திருந்தது