கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் 4,279 நிலையங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தப் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை சாதாரண தரப் பரீட்சையில் 370,739 பாடசாலை பரீட்சார்த்திகளும், 206,481 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்
இதேவேளை, பரீட்சை நிலையங்கள் மற்றும் இணைப்பு நிலையங்களுக்குள் அனுமதியற்ற எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதையும், ஊர்வலங்கள், கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பரீட்சை மோசடிகள் மற்றும் பரீட்சைக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் இடம்பெறின் 011-2785211 என்ற எண்ணின் மூலம் முஐறப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

