Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருக்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பேச்சாளருமான மு.ஜஹாங்கீர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கைத்தொழில், வர்த்தக அமைச்சில் நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஹஸீப் மரிக்கார், முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, மு.ஜஹாங்கீரால் எழுதப்பட்ட “சிறகிருந்தால் போதும்” எனும் நூல் அமைச்சருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post