Breaking
Fri. Dec 5th, 2025

வீதியில் வீசப்பட்ட சிசுவொன்றை நாயொன்று வாயால் கௌவ்விச் செல்லும் படமொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் யாரோ ஒருவரால் வீசப்பட்டிருந்த தொப்புள் கொடியுடன் காணப்பட்ட சிசுவொன்றை நாயொன்று தூக்கிச் சென்று அருகில் இருந்த வீட்டு வாசலில் போட்டுள்ளது.

மேலும் வாசலில் நின்று குரைத்துமுள்ளது.  வீட்டில் உள்ளோர் வெளியே வந்து பார்த்த தும் சிசுவொன்று வாசலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவ்வீட்டிலிருந்தோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் குழந்தை உயிரோடு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குழந்தைக்கு காயமேதும் ஏற்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நாயின் புத்திக் கூர்மையான செயற்பாட்டால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

246

180

dog-save-new-born-696x348

By

Related Post