சிலாவத்துறை தபால் நிலையத்திற்கு விரைவில் புதிய கட்டடம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் முசலிக்கு விஜயம் செய்த, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தற்காலிகக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் சிலாவத்துறை தபால் நிலையத்தைப் பார்வையிட்டதுடன், விரைவில் நிரந்தரக் கட்டிடமொன்றைக் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.

-ஊடகப்பிரிவு-