சீன தூதுக்குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துப் பேச்சு!

-ஊடகப்பிரிவு-

இலங்கை வந்துள்ள சீனாவின் யுன்னான்  மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் (Gao Shuxun) தலைமையிலான உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர், கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று (23) அமைச்சில் சந்தித்துப் பேசினர்.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சீன தென்னாசிய எக்ஸ்போ மற்றும் யுனனில் இடம்பெறவுள்ள 25 வது சீன குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகக் கண்காட்சி தொடர்பில் அமைச்சருக்கும் தூதுக்குழுவுக்குமிடையில் பரஸ்பர கலந்துரையாடல் நடைபெற்றது.