Breaking
Fri. Dec 5th, 2025

எல்ல – நியுபேர்க் பகுதியில் வைத்து அஞ்சல் பணியாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகித்து வந்த அஞ்சல் பணியாளர் ஒருவரை, எல்ல – நியுபேர்க் – நான்காம் கட்டை பிரதேசத்தில் வைத்து மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் தாக்குதல நடத்தி இருந்தனர்.

இதற்கு எதிராக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.அத்துடன் இது தொடர்பில் செந்தில் தொண்டமானை கைது செய்ய வலியுறுத்தி அஞ்சல் பணியாளர்களும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான உத்தரவை பண்டாரவளை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.இதன் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related Post