ஏறாவூர் அபூ பயாஸ்
காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் UL. அஹமத் மொஹைதீன் (65) அவர்கள் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் நேற்றிரவு வபாத்தானதால், அன்னாரது ஜனாசாவை ஏற்றிக்கொண்டு காத்தான்குடி நோக்கி வரும்போது அதனை பின்தொடர்ந்து வந்த வேன் செவனப்பிட்டியில் வைத்து இன்று அதிகாலை 03 .00 மணியளவில் தடம் புறண்டு விபத்துக்குள்ளானது.
எனினும் இதனால் வேன் சேதமடைந்த போதிலும் எவரும் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினர். அல்ஹம்துலில்லாஹ்!

