Breaking
Fri. Dec 5th, 2025

A.J.M. மக்தூம்

சவூதி அரபியாவின் புதிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலுஸுஊத்,ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்து இலங்கைஜனநாயகசோசலிச குடியரசின் ஆறாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒருதந்தியைஅனுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னர் இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்து தந்தியில் தனது சார்பிலும், சவுதி அரேபியா அரசு மற்றும் தனது மக்களின் சார்ப்பிலும் இனிய வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அவர், புதிய ஜனாதிபதியின் முன்னேற்றம்,சுபீட்சம் மற்றும் சந்தோஷத்திற்கும் உடல்நலத்திற்கும் பிரார்தித்துள்ளதாக அறிய முடிகிறது.

அதே வேலை, சவூதியின் முடிக்குரிய இளவரசர் மற்றும் துணைப் பிரதமர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு மகிழ்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நல் வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து தந்தியில் அனைத்து இலங்கை மக்களும் முன்னேற்றம், சுபீட்சம் அடைய பிரார்த்திதுள்ளதாக அறிய முடிகிறது.

Related Post