ஜனாதிபதியின் காத்தான்குடி கூட்டத்தில் கம்பி சரிந்து விழுந்ததில் 6 பெண்கள் காயம்

அபூ ஷஹ்மா

(19) காத்தான்குடியில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தின் இடையில் பொலித்தீன் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி ஒன்று சரிந்து விழுந்ததில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆறு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

அங்கு வீசிய பலத்த காற்றும் அதனோடு பெய்த கடும் மழையை அடுத்தே குறித்த கம்பி சரிந்து விழுந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.