Breaking
Sat. Dec 6th, 2025

ஜே.வி.பியின் ஜனநாயகத்திற்கான செயற்பாட்டார்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

நேற்று அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் டொக்டர் விமல் கீகனகே ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.

இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த ஏனைய 17 பேரில் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் ஜனாதிபதி தேர்தலிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டு பிரதான வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவினை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post