முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளராக இருந்த முன்னாள் கப்டன் சேனக்க ஹரிப்பிரிய டி சில்வா ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் பிரசார பணிகளுக்கு இராணுவத்தினரை பயன்படுத்தியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

